For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”பாமகவில் தலைமை நிர்வாக குழு உறுப்பினரானார் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திமதி”

பாமகவின் தலைமை நிர்வாக குழு உறுப்பினராக மகள் ஸ்ரீகாந்திமதியை நியமித்து நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளர்.
01:15 PM Aug 22, 2025 IST | Web Editor
பாமகவின் தலைமை நிர்வாக குழு உறுப்பினராக மகள் ஸ்ரீகாந்திமதியை நியமித்து நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளர்.
”பாமகவில் தலைமை நிர்வாக குழு உறுப்பினரானார் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்திமதி”
Advertisement

பாமகவில் நிறுவனர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவருக்குமான மோதல் போக்கு கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து விட்டு செயல் தலைவர் பதவியை வழங்கிய .ராமதாஸ், தன் உயிர் மூச்சு உள்ளவரை நான் தான் பாமகவிற்கு நிறுவனர் மற்றும் தலைவராக செயல்படுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் ராமதாஸ் வழக்கிய செயல் தலைவர் பதவியை ஏற்க மறுத்த அன்புமணி, தானே தொடர்ந்து பாமகவிற்கு தலைவராக நீடிப்பேன் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இரு வேறு  அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் ராமதாஸ் கடந்த ஜுலை மாதம் பாமகவின் புதிய தலைமை நிர்வாக குழுவை  அறிவித்தார். அக்குழுவில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தனது ஆதரவாளர்களான ஜி.கே.மணி, அருள்மொழி ஆகியோர் கொண்ட பாமகவின் புதிய தலைமை நிர்வாக குழு அறிவிக்கபட்டனர்.

இந்நிலையில் பாமக தலைமை நிர்வாக குழுவில் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியையும் ராமதாஸ் சேர்த்துள்ளார். கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட பாமக தலைமை நிர்வாக குழு பட்டியலை தற்போது மீண்டும் மாற்றி அமைத்துள்ள ராமதாஸ், அந்த பட்டியலில் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியையும் இணைத்து 22 பேர் கொண்ட பாமக நிர்வாக குழுவை ராமதாஸ் அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை மேடையேற்றி தனது அருகில் ராமதாஸ் அமர வைத்துக் கொண்டார். அப்போதே ஸ்ரீகாந்திமதியை கட்சிக்குள் கொண்ட வர ராமதாஸ் திட்டமிட்டு வருவதாக பாமகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அதை போலவே தற்போது தனது மூத்த மகளுக்கு பாமகவின் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் பதவியை ராமதாஸ் வழங்கியிருக்கிறார். பாமகவில் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்த தனது மகன் அன்புமணியின் பதவிகளை ஒவ்வொன்றாக பறித்து வரும் அதே நேரத்தில் தனது மூத்த மகள் ஸ்ரீகாந்திமதியை கட்சிக்குள் கொண்டு வந்து அன்புமணியின் இடத்தை தனது மூத்த மகள் மூலம் அலங்கரிக்க ராமதாஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   இது பாமகவில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement