Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தைலாபுரம் இல்லத்தில் ’தொலைபேசி’ ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் ராமதாஸ் புகார்!

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் உள்ள தொலைபேசி,வைஃபை மற்றும் சிசிடிவி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் ராமதாஸ் புகார் செய்துள்ளார்.
10:48 AM Aug 05, 2025 IST | Web Editor
விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் உள்ள தொலைபேசி,வைஃபை மற்றும் சிசிடிவி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையில் ராமதாஸ் புகார் செய்துள்ளார்.
Advertisement

தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையிலான உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் மருத்துவர் ராமதாஸ் இருக்கையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஓட்டு கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

இதனைத் தொடர்ந்து அவர் விழுப்புரம் சைபர் கிரைம் மற்றும் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் மற்றும் கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தன் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது அன்புமணிதான் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்

இந்நிலையில் ஒட்டு கேட்கும் கருவி யார் வைத்தது என தனியார் புலனாய்வு நிறுவனத்துடன் பாமகவினர் புலன் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் மேலும் ஏதேனும் வீட்டில் உள்ளதா என புலனாய்வு செய்தனர். அப்போது போது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள வைஃபை, சிசிடிவி மற்றும் தொலைபேசி ஆகியவை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் இது தொடர்பாக கோட்டகுப்பம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Tags :
AnbumaniRamadosslatestNewsphonehackPMKRamadossTNnews
Advertisement
Next Article