"ஆணவம் அதிகமாகிவிட்டதால் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கையை 240 ஆக ராமர் குறைத்துவிட்டார்" - ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேச்சு!
ராமரை வழிபடும் கட்சிக்கு ஆணவம் அதிகமாகிவிட்டது என ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து பிரதமர் மோடி தலைமையிலான பாஜக. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்து கொண்டது . இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது.
இந்நிலையில், கடந்த இரண்டு மக்களவைத் தேர்தலைவிட பாஜக-வின் வாக்கு சதவிகிதமும் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. குறிப்பாக, ராமர் கோயில் இருக்கும் ஃபைசாபாத் தொகுதியிலும் பாஜக தோற்றுவிட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 'ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜான் சமரோ' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் கலந்து கொண்டார்.
இதையும் படியுங்கள் : “தீ விபத்தில் குற்றம் செய்தவர்கள் மீது குவைத் அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"ராமரை வழிபடும் கட்சிக்கு ஆணவம் அதிகமாகிவிட்டது. அதனால் ராமர் அவர்களை 240 இடங்களை கொடுத்து அவர்களின் ஆணவத்தை நிறுத்தியிருக்கிறார். மேலும், அவர்களின் நம்பிக்கைக்காக அவர்களை பெரிய கட்சியாக உருவாக்கியிருக்கிறார். ராமரை நம்ப மறுத்தவர்களுக்கும் 234 இடங்களை கொடுத்தும் தோற்கடித்திருக்கிறார். ராமருக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு ஆட்சியை கொடுக்கவில்லை. "
இவ்வாறு அவர் தெரிவித்தார்.