“ராமர் கோயிலின் விழா ஒரு பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வு! இதை மரியாதையுடன் காங்கிரஸ் நிராகரிக்கிறது!”
07:34 PM Jan 10, 2024 IST
|
Web Editor
மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் அயோத்தி கோயில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அந்த அற்புதமான கோயிலின் விழா பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வாகியுள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களால் அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா, தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பதால் அவர்களின் அழைப்பை மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
ராமர் கோயிலின் திறப்பு விழா ஒரு பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்வாக நடத்தப்படுவதால் இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே, சோனியா காந்தி, ஆதிர் ரஞ்சன் சௌவுத்ரி ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
Advertisement
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்க முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமர் கோயில் விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
Next Article