தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தல் - தேதி அறிவித்த தேர்தல் ஆணையம்!
தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் தேர்தெடுக்கப்பட்டுள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், காலியாவுள்ள இடங்களுக்கான மாநிலங்களைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம், என்.சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வைகோ, பி. வில்சன் ஆகியோரது மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிகாலம் வருகிற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
அதே போல் அசாம் மாநிலத்தின் மிஷன் ரஞ்சன் தாஸ், பிரேந்திர பிரசாத் பைஷ்யா ஆகியோரது பதவிக்காலமும் வருகிற ஜுன் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் வருகிற ஜூன் 19ஆம் தேதி இரு மாநிலங்களில் காலியாகவுள்ள இடங்களில் மாநிலங்களைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதே தேதியில் குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தவுள்ளதாக நேற்று(மே.26) இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.