“டூரிஸ்ட் பேமிலி” பட இயக்குனர் படத்தின் டைட்டில் டீசரை நாளை வெளியிடுகிறார் ரஜினி...!
அறிமுக இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான படம் டூரிஸ்ட் பேமிலி. இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பேமிலி எண்டடெய்னராக வெளியான இப்படம் ரூ 90 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஒரு புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இயக்குகிறார். இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
அண்மையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடந்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாகவும், டைட்டில் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.