பைசன் படம் பார்த்து மாரி செல்வராஜை வாழ்த்திய ரஜினிகாந்த்!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்து திரைக்கு வந்துள்ள பைசன் படத்தை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வெளியிட்டுள்ள பதிவில்,
"சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘ - ரஜினிகாந்த்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய ரஜினிகாந்த் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.