ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்! -ஏன் தெரியுமா?
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் 24வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரியால் பராக் 76 ரன்களையும், சஞ்சு சாம்சன் 76 ரன்களையும் குவித்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி கடைசி ஓவரில் பவுண்டரிகளை வீசி வெற்றியை பெற்றது. இந்த சீசனில் முதல் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் கம்பீரமாக இருந்த ராஜஸ்தான் நேற்று முதல் தோல்வியை தழுவியது. குஜராத் இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் நேற்று குஜராத் டைட்டனஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, மெதுவாக பந்துவீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ ரூ. 12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.