ராம் சரணின் “பெடி” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
தெலுங்கு சினிமாவின் முண்ணனி நடிகர்களில் ஒருவர் ராம் சரண். இவர் தற்போது உப்பெனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான புச்சி பாபு சனா இயக்கும் ‘பெடி’ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ‘பெடி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
#WhatisChikiri ? 🤔
Know it tomorrow at 11.07 AM 🔊
The world will move to its beat and start vibing 🕺🏻 ❤️🔥#PEDDI GLOBAL RELEASE ON 27th MARCH, 2026.
Mega Power Star @AlwaysRamCharan @NimmaShivanna #JanhviKapoor @BuchiBabuSana @arrahman @RathnaveluDop @artkolla @NavinNooli… pic.twitter.com/c6DPBcITQW
— PEDDI (@PeddiMovieOffl) November 4, 2025