Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராஜஸ்தான் : பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 மாணவர்கள் உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்!

ராஜஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
02:43 PM Jul 25, 2025 IST | Web Editor
ராஜஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி தொடக்கப் பள்ளியில் இன்று காலை பள்ளியின் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, பள்ளிக்கு வந்த அப்பகுதி கிராம மக்கள் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

இதையடுத்து படுகாயம் அடைந்த மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த அறையில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

 

எனவே காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மீட்பு பணியில் 4 ஜே.சி.பி. எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் "ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Accidentcondolesmodiprime ministerRajasthanRoof CollapseSchool
Advertisement
Next Article