For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RainAlert | பிற்பகல் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

10:34 AM Dec 03, 2024 IST | Web Editor
 rainalert   பிற்பகல் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது.

Advertisement

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல் கடந்த 30ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த கனமழையால் விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். வீடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை, ரயில் பாதைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளுக்கு இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது.

Advertisement