For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RainAlert | தமிழ்நாட்டில் செப்.1 வரை மழைக்கு வாய்ப்பு!

03:08 PM Aug 26, 2024 IST | Web Editor
 rainalert   தமிழ்நாட்டில் செப் 1 வரை மழைக்கு வாய்ப்பு
Advertisement

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழநாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நாளை மறுநாள் முதல் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை – எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? - News7 Tamil

அதேபோல், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இன்று முதல் ஆக. 30 வரை தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement