For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#RainAlert | அடுத்த 2 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

02:11 PM Nov 01, 2024 IST | Web Editor
 rainalert   அடுத்த 2 மணி நேரத்திற்கு 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Advertisement

தமிழநாட்டில் 28 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதேபோல், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையும் படியுங்கள் : #GoldRate | அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement