#RainAlert | சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடலிலும், தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை
மேலும், தமிழ்நாட்டில் வரும் 25ம் தேதி வரை மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சென்னையில் பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், அமைந்தகரை, சென்ட்ரல், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.