இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கீடு!
இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வை அடுத்து இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து 2 போட்டிகளிலும், இந்தியா 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஒரு போட்டி டிரா ஆனது. இந்த நிலையில் 5ஆவது போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 ரன்கள் எடுத்தும், கே.எல்.ராகுல் 14 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். 4ஆவது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன் உடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரும் நேர்த்தியாக பந்தை எதிர்கொண்டு ரன்கள் சேர்த்து வந்தனர்.
இந்திய அணி 23 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல்நாள் உணவு இடைவேளை விடப்பட்டது. தொடர் மழையால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மழை நின்று விரைவில் மீண்டும் போட்டி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது