அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
தமிழ் நாட்டின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10:00 AM Jan 14, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வள்மண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும் வட தமிழகத்தின் ஒரிரு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யுக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.