For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரயில்வே திருத்த மசோதா 2024 | “குறைகளை சுட்டிக் காட்டினால் தனியார்மயமாக்கலை மத்திய அரசு முன்மொழிகிறது” - கனிமொழி எம்பி!

09:26 PM Dec 05, 2024 IST | Web Editor
ரயில்வே திருத்த மசோதா 2024   “குறைகளை சுட்டிக் காட்டினால் தனியார்மயமாக்கலை மத்திய அரசு முன்மொழிகிறது”   கனிமொழி எம்பி
Advertisement

ரயில்வேதுறையை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

ரயில்வே துறையில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டினால், அதனை தனியார்மயமாக்க மத்திய அரசு முன்மொழிவதாக கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ரயில்களின் தரம் மிக மோசமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ரயில்வே திருத்த மசோதா 2024 குறித்து நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. மக்களவையில் பேசியதாவது :

“வழக்கம்போல மத்திய அரசு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என கட்டளையிடுவதைபோலவே ரயில்வே திருத்த மசோதா 2024 விஷயத்திலும் நடந்து கொள்கிறது. நாட்டிலுள்ள மற்ற அனைத்து ரயில்வேகளைவிட தெற்கு இரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ரயில்களின் தரம் மிக மோசமானதாக இருக்கின்றது. உணவு மற்றும் கழிப்பறை வசதிகளின் தரம்கூட மிக மோசமானதாக இருக்கின்றன. இதை சுட்டிக்காட்டும்போது மத்திய அரசு ரயில்வேதுறை தனியார்மயமாக்கலை முன்மொழிகிறது.

இப்படி ரயில்வேதுறையை மத்திய அரசு கைகழுவுவது சரியல்ல. நாட்டின் பெரும்பான்மையான அடித்தட்டு மக்கள் இன்றும் தங்களின் முதன்மை போக்குவரத்தாக ரயில்களையே நம்பி இருக்கின்றனர். அதை கருத்தில்கொண்டு ரயில்வேதுறையை தனியார்மயமாக்கும் எண்ணத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிடவேண்டும்.

மேலும் எனது தொகுதியான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி என்பது வணிகர்கள் அதிகமுள்ள நகரம். ஆனால் சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் நாளொன்றுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகம் கூடுதல் இரயில்களை இவ்வழித்தடத்தில் இயக்கவேண்டும், உடனடியாக முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்றும், சென்னை-தூத்துக்குடி வழித்தடத்தில் வந்தேபாரத் ரயில் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement