Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘ரயில்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

07:26 PM Jun 07, 2024 IST | Web Editor
Advertisement

அறிமுக இயக்குநர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரயில்’ திரைப்படம் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கு கதை, வசனம் எழுதி தேசிய விருதுப் பெற்ற பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ரயில். இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார். இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர். ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ளனர்.

எஸ்.ஜே.ஜனனி இசையமைத்துள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. வட இந்தியர்கள் தமிழகத்தில் அதிகம் குடியேறியுள்ளனர் என சமீபத்தில் அதிகளவிலான பேச்சுகள் எழுந்தன. இந்த விதாதம் குறித்த படம்தான் இந்த ரயில். இந்த படத்தின் பெயரும் முன்னதாக ‘வடக்கன்’ எனவே இருந்தது.  இப்படத்தின் தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்தே இப்படத்தின் தலைப்பு ரயில் என மாற்றப்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படம் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
Cinema PalaceDiscovery CinemasKungumaRajrailVairamala
Advertisement
Next Article