வயநாடு தேர்தல் | "நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" - பிரியங்கா காந்தி பதிவு!
நாடாளுமன்றத்தில் மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நவம்பர் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 62.39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : வயநாடு இடைத்தேர்தல் | அண்ணன் ராகுலை மிஞ்சிய தங்கை பிரியங்கா காந்தி! 6 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை!
இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நவம்பர் 13-ம் தேதி வயநாட்டில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த சூழலில் வயநாடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.
இந்த இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 6 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், வயநாடு மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்து பிரியங்கா காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது :
"வயநாட்டின் என் அன்பு சகோதரர் மற்றும் சகோதரிகளே, நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. காலப்போக்கில், இந்த வெற்றி உங்கள் வெற்றியாக இருப்பதை நீங்கள் உண்மையிலேயே உணர்வீர்கள் என்பதையும், உங்களை பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்டு உங்களுக்காக போராடுவதையும் உறுதி செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இந்த மரியாதையை எனக்கு வழங்கியதற்கு நன்றி. கேரளா முழுவதும் உள்ள தலைவர்கள், தொழிலாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்த பிரசாரத்தில் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி.
என் அம்மா, ராபர்ட் மற்றும் எனது பிள்ளைகள் - ரைஹான் மற்றும் மிராயா ஆகியோர் எனக்கு அளித்த அன்புக்கும் தைரியத்திற்கும் நன்றி என்ற சொல் போதாது. அதேபோல என் சகோதரர் ராகுல் காந்தி, அனைவரையும் விட துணிச்சலானவர். எனக்கு அவர் வழி காட்டியதற்கும், எப்போதும் என் பின்னால் இருப்பதற்கும் நன்றி" இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.