தென் அமெரிக்கா நாடுகளுக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம்..!
மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
04:28 PM Sep 27, 2025 IST | Web Editor
Advertisement
மக்களவை எதிர்கட்சித்தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
Advertisement
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன்கேரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, தென் அமெரிக்காவிற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். நான்கு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வணிக சமூக உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாட உள்ளார்”
என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தென் அமெரிக்காவில் சந்திக்கும் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை.