சலூனுக்கு திடீர் விசிட் அடித்த #RahulGandhi | பணியாளரிடம் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும், காங்கிரஸின் முக்கிய தலைவராகவும் உள்ள ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள அஜித் என்பவரின் சலூனுக்கு சென்று முடி திருத்தம் செய்து கொண்டார்.
அந்த நேரத்தில், அஜித்தின் தொழில்நிலை மற்றும் வாழ்க்கையில் அவர் சந்திக்கும் சவால்களை அறிந்து கொள்வதற்காக நேரடியாகப் பேசினார். அஜித்தின் மனக்குறை மற்றும் இந்தியாவில் கடுமையாக உழைக்கும் ஏழை, நடுத்தர மக்களின் நிலையை அவர் உணர்ந்து கொண்டார். இந்த சந்திப்பு மற்றும் உரையாடலின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி, தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், அஜித்தின் வாழ்வாதார சிக்கல்களை விளக்கும் இந்த அனுபவத்தை வீடியோவாக பதிவிட்டு தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "இந்த நாடு கடுமையான உழைப்பை வெளிப்படுத்தும் ஏழை, நடுத்தர மக்களின் போராட்டங்களை மீண்டும் மீண்டும் காண்கிறது. முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைப்பவர்கள், குயவர்கள் மற்றும் தச்சர்கள் வரை உயர்ந்த வருமானச்சார்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் தங்களின் கனவுகளை இழந்து வருகின்றனர்," என்று ராகுல் கூறியுள்ளார்.
இந்நிலையில், தனிநபர்களின் திறமையை மதித்து, அவர்களின் கடின உழைப்பை வெற்றியின் ஏணியாக்கும் சமூகத்தை உருவாக்க புதிய திட்டங்கள், தீர்வுகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், காங்கிரஸ் கட்சியும் இந்தப் பதிவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, ராகுல் காந்தியின் இந்த பொதுமக்கள் தொடர்பு நடவடிக்கையை பாராட்டியுள்ளது.