மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா - இன்று கொடியேற்றம்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஏப்ரல் 19 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 20 ஆம் தேதி திக் விஜயமும், இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 21 ஆம் தேதியும், 22 ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்நிலையில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள் : இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் அதிரடி - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியது மும்பை!
ஏப்ரல் 21 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 22 ஆம் தேதி காலை மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்வு நடைபெறுகிறது.ஏப்ரல் 24 ஆம் தேதி கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தலும், அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு நடைபெறுகிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலை பூ பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர், அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். ஏப்ரல் 27 ஆம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு வந்தடைகிறார்.