For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவ் என்ன செய்தார்? - ராகுல் காந்தி கேள்வி!

11:29 AM Nov 27, 2023 IST | Web Editor
தெலங்கானாவுக்கு சந்திரசேகர ராவ் என்ன செய்தார்    ராகுல் காந்தி கேள்வி
Advertisement

காங்கிரஸிடம் கேள்வி எழுப்புவதற்கு முன் தெலங்கானாவுக்காக முதல்வர் சந்திரசேகர் என்ன செய்தார் என்று மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

Advertisement

தெலங்கானாவில் வரும் 30-ந் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.  ஆட்சியைக் கைப்பற்றுவதில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் போட்டியிடும் கம்மாரெட்டி தொகுதியில் அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி களமிறக்கப்பட்டு இருக்கிறார்.

ரேவந்த் ரெட்டியை ஆதரித்து கம்மாரெட்டியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி நவம்பர் 26ஆம் தேதி பங்கேற்று பேசுகையில்; 

நாட்டலேயே ஊழல் மிக்க ஆட்சியை சந்திரசேகர் ராவ் நடத்தி வருகிறார். பணம் கொழிக்கும் அனைத்துத் துறைகளும் அவரது குடும்பத்தினர் வசமே உள்ளன. காங்கிரஸால் அளிக்கப்பட்ட 6 முக்கிய வாக்குறுதிகளுக்கும் முதல் அமைச்சரவைக்
கூட்டத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டு திட்டங்கள் மிக விரைவாக செயல்படுத்தப்படும்.

இதையும் படியுங்கள் : நீதிமன்றங்களை அணுக மக்கள் அஞ்சக் கூடாது – தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!

தெலங்கானாவுக்கு  காங்கிரஸ் என்ன செய்தது? என்று முதல்வர் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் என்ன செய்தது என்பதை விட, 'கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பாரத ராஷ்டிர சமிதி என்ன செய்தது?' என்பதே கேள்வியாக இருக்க வேண்டும். அவர் செல்லும் சாலைகளும், அவர் படித்த பள்ளி, கல்லூரிகளும் காங்கிரஸ் ஆட்சிகளில்  அமைக்கப்பட்டவை.

மேலும், காங்கிரஸால் தகவல் தொழில்நுட்ப மையமாக மேம்படுத்தப்பட்ட ஹைதராபாத் நகரில் இருந்து கொண்டுதான் பல கோடிகளை அவர் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், தெலங்கானாவில் தனிபெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. இங்கு பிஆர்எஸ்-ஐயும் மத்தியில் பாஜகவையும் தோற்கடிப்பதே காங்கிரஸின் இலக்கு. காலேஸ்வரம் நீர் பாசனத் திட்டத்தில் பெரும் பணத்தைக் கொள்ளையடித்து, 20 லட்சம் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியவர் சந்திரசேகர் ராவ். காங்கிரஸிடம் கேள்வி எழுப்புவதற்கு முன் தெலங்கானாவுக்காக கடந்த 10 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார்? என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் மக்களிடம் பட்டியலிட வேண்டும்' என்றார்.

Tags :
Advertisement