“ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை!” - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
ஜனநாயகம் பற்றி பேச ராகுல் காந்திக்கு உரிமை இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று (31.03.2024) நடைபெற்ற ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் பேரணியில் இந்தியா கூட்டணிக் கட்சியினர் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
தேர்தலுக்கு முன் நீங்கள் எத்தனை கட்சிகளை கூட்டினாலும் மோடி மட்டுமே ஆட்சிக்கு வருவார். நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக ஏற்க நாட்டு மக்கள் தயாராக உள்ளனர். அடுத்த ஆட்சிக் காலத்தில் இந்தியா மூன்றவாது பெரிய பொருளாதாரமாக மாறும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஜனநாயகம் பற்றி பேச உரிமை இல்லை.
 ஏனெனில் அவரது பாட்டி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி லட்சக்கணக்கானோர்களை சிறையில் அடைத்தும், அவசர காலத்தின்போது அரசியல் கட்சிகளை தடை செய்ததாகவும் அமித் ஷா கூறினார். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று ராகுல் கூறிய நிலையில், அமித்ஷா இதற்கு பதிலளித்துள்ளார்.