கேதார்நாத் கோயிலில் ராகுல் காந்தி தரிசனம் - பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம்!
உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத் கோயிலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, தேநீர் விநியோகித்தார்.
சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரகண்ட் மாநிலத்தில் 3 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்துக்கு வருகை புரிந்த அவர், சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தைத் முடித்துக் கொண்டு அங்கிருந்து கேதர்நாத் சென்றார். அங்குள்ள கோயில் அர்ச்சகர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கேதார்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
केदारनाथ धाम में @RahulGandhi जी ने श्रद्धालुओं को प्रसाद वितरण किया।
जय बाबा केदार pic.twitter.com/F1cF3dwzZx
— Congress (@INCIndia) November 6, 2023
அதனைத் தொடர்ந்து இன்று கேதார்நாத்திலுள்ள ஆதி குரு சங்கராச்சார்யா பீடத்தில் தரிசனம் செய்தார். பின்னர் கோயில்களில் பக்தர்களுடன் இணைந்து திருப்பணிகள் மேற்கொண்ட ராகுல் காந்தி, சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்களுக்கு தேநீர் விநியோகித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தார்.
அப்போது அங்கு வரிசையில் காத்திருந்த பக்தர்களுடன் ராகுல் காந்தி உரையாடினர். ராகுல் காந்தியுடன் அங்கிருந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ராகுல் காந்தியின் கேதர்நாத் பயணம் குறித்த புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.