கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ராகிங் கொடுமை; ஜூனியர் மாணவருக்கு மொட்டை அடித்த 7 பேர் கைது
09:42 AM Nov 08, 2023 IST | Web Editor
Advertisement
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து, தாக்கி ராக்கிங் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் 7 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் முதுநிலை மாணவர்கள், முதலாம் ஆண்டு பயிலும் மாணவரிடம் மது அருந்த பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுத்த முதலாம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து முதுநிலை மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவரின் பெற்றோர்கள் அளித்த புகாரை அடுத்து, மாதவன், மணி, வெங்கடேஷ், தரணிதரன், ஐயப்பன், சந்தோஷ் மற்றும் யாலிஸ் ஆகிய 7 மாணவர்களை பீளமேடு காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.