ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 5-ம்தேதி நடைபெற உள்ளது.
இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 10-ம்தேதி முதல் 17- ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை உள்ளிட்ட அரசு விடுமுறை காரணமாக ஜன. 12,14,15,16 ஆகிய நான்கு நாட்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. ஜன.10,13, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. 100-மீட்டர் முன்பு எல்லை கோடு வரையப்பட்டு, வேட்பாளர்கள் உடன் 4- பேர் மட்டுமே அனுமதிக்க படுகின்றனர்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் இடம் உட்பட 13- இடங்கள் சிசிடிவி கேமராக்கள்
மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11மணி முதல் 3-மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய பொதுப்பிரிவினருக்கு 10- ஆயிரம் ரூபாயும், எஸ்சி
எஸ்டி பிரிவினருக்கு 5- ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்தேர்தலிலும் தேர்தல் மன்னன் பத்மராஜன் 247வது முறையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.