ஆயிரம் கோடியை நெருங்கும் #Pushpa2… நான்கே நாட்களில் இத்தனை கோடி வசூலா?
'புஷ்பா 2' திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ.829 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது.
மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸானது. இப்படம் 3 மணிநேரம் 21 நிமிடம் ஓடக்கூடிய அளவு மிகப்பெரிய ரன்னிங் டைம் கொண்டுள்ளது.
அதில் முதல் பாதி 1 மணிநேரம் 40 நிமிடமும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 41 நிமிடமும் ஓடும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 'புஷ்பா 2' திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் ரூ.829 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.