For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

 ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படத்தின் 2-வது பாடல் எப்போது தெரியுமா?

12:18 PM May 23, 2024 IST | Web Editor
 ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படத்தின் 2 வது பாடல் எப்போது தெரியுமா
Advertisement

 ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படத்தின் ‘SOODAANA (The Couple Song)’ பாடல் மே 29-ம் தேதி வெளியாகும் என வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'புஷ்பா'.  இந்த படம் தமிழ்,  தெலுங்கு,  இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது.  கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.  இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது 'புஷ்பா' திரைப்படம்.

இதனையடுத்து, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.  ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள் : டெம்போவில் பயணித்தபடி வாக்கு சேகரித்த ராகுல்காந்தி! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இந்த நிலையில், 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'சூசெகி (The Couple Song)' என்ற பாடல் வருகிற 29ம் தேதி காலை 11.07 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement