கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லரை பின்னுக்கு தள்ளிய புஷ்பா 2!
கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லரை விட நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $17 மில்லியன் வசூல் செய்துள்ளது.
கிறிஸ்டோபர் நோலனின் அறிவியல் புனைகதை நாடகமான இன்டர்ஸ்டெல்லர் கடந்த வாரம் IMAX திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. ஆனால் அதேநேரம் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2 : தி ரூல் திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான இப்படம் வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து காட்டு தீ போல் பரவி வருகிறது.
கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் பாராட்டப்பட்ட அறிவியல் புனைவு நாடகத் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளியதோடு, தற்போது மோனா 2, விக்கட் மற்றும் கிளாடியேட்டர் 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளது புஷ்பா 2. இரண்டே நாட்களில் 1,245 திரையரங்குகளில் வெளியாகி $1,700,000 வசூலித்துள்ளது.
இதற்கிடையில் இந்தியாவில் புஷ்பா 2 அனைத்து IMAX திரையரங்குகளில் வெளியாகியுள்ளதால், கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லர் மறு வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. புஷ்பா 2 வெளியான இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ₹421.30 கோடி வசூலித்துள்ளது. இது இந்தியப் படத்திற்கும் இல்லாத வகையில் அதிக ஓபனிங்கைப் பதிவு செய்தது. தற்போது வரை ரூ.800 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.