For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரரால் பஞ்சாப் அணி திரில் வெற்றி : பாராட்டு மழையில் வீரர்!

12:27 PM Apr 05, 2024 IST | Web Editor
ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரரால் பஞ்சாப் அணி திரில் வெற்றி   பாராட்டு மழையில் வீரர்
Advertisement

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் லீக் போட்டியில் அதிகபட்சமாக ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் விளாசி பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றி அடைய செய்தார்.

Advertisement

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 17வது லீக் போட்டியில்  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி  அகமதாபாதில் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்; கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தானது – வெளியான அதிர்ச்சி தகவல்!

இதையடுத்து 19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் விளாசியது.  அதிகபட்சமாக ஷஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முக்கியமான காரணமானவர் 32 வயதான சஷாங்க் சிங்.

15 ஐபிஎல் போட்டிகளில் 9 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 160 ரன்கள் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது. தொடக்க காலத்தை விட கடந்த சில விளையாட்டுகளில் அவரின் வேகம் குறைந்ததாக கூறப்படுகிறது. அதனால், பஞ்சாப் அணியினரிடையே அவரை தவறுதலாக ஏலத்தில் எடுத்ததாக போசப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றையப் போட்டியில் 200 ரன்கள் என்ற இலக்கினை விரட்டும்போது சீனியர் வீரர்கள் ஆட்டமிழக்க குறைவான ஆட்டம் ஆடிய சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். ஆட்ட நாயகன் விருதுபெற்ற சஷாங்க் சிங்குக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தன்னம்பிக்கை நிரம்பியுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.

Tags :
Advertisement