பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை சின்னக்கருப்பு! உரிமையாளருக்கு கார் பரிசு!
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை சின்னக்கருப்பு காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசாக கார் வழங்கப்பட்டது.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் சங்கீதா, எம்.பி. வெங்கடேசன், எம்எல்ஏ பூமிநாதன் கலந்து கொண்டனர். போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆன்லைன் டோக்கன் பெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மறு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனைக்கு பின்னர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1000 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. மாடுபிடி வீரர்களின் உறுதி மொழி ஏற்புக்கு பிறகு ஜல்லிக்கட்டு துவங்கியது. சுமார் 900 காளைகள் பரிசோதனைக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதிக்கப்பட்டது. 35 காளைகள் நிராகரிக்கப்பட்டன. இதே போன்று ஜல்லிக்கட்டு போட்டியில் வீரமுடன் காளைகளை தழுவிய வீரர்களில் 16 பேர் காயமடைந்தனர். மாட்டின் உரிமையாளர்கள் 10 பேர் காயமடைந்தனர்.
இதே போன்று பார்வையாளர்கள் 17 பேரும், காவல் பணியில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர், காவல் சார்பு ஆய்வாளர், துணை காவல்கண்காணிப்பாளர் உள்பட மூவரும் காயமடைந்தனர். இதன்படி மொத்தமாக 46 பேர் காயமடைந்த நிலையில், 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த போட்டியில், புதுக்கோட்டை சின்னக்கருப்பு காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
கார் பரிசு#Palamedu | #Jallikattu | #Pongal2024 | #Pongal | #Celebration | #Madurai | #Palamedu | #Jallikattu | #JALLIKATTU2024 | #MaatuPongal | #மாட்டுபொங்கல் | #பாலமேடு | #மதுரை | #ஜல்லிக்கட்டு | #பொங்கலோபொங்கல் | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/DkB8I7gG8I
— News7 Tamil (@news7tamil) January 16, 2024