Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிப்பு - உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்!

05:32 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

புதுச்சேரியில் மாயமான 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

சோலை நகரை சேர்ந்த நாராயணன் - மைதிலி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆர்த்தி, கடந்த சனிக்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததார். நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து காவல்நிலையத்திலும் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் விசாரணை தொடங்கிய போலீசார், முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சிறுமி சோலை நகரை விட்டு வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து வீடு வீடாக சோதனை செய்த போலீசார், சிறுமி கிடைக்காததால் 5 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் சிறுமி அம்பேத்கர் நகர் பகுதி வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்டு சடலமாக கிடப்பதாக போலீசார் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும் மக்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதற்கிடையே கூட்டத்தில் சந்தேகப்படியாக நின்றுக் கொண்டிருந்த ஒரு முதியவர் மற்றும் மூன்று இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள மணிகூண்டு அருகே சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுடன் எம்எல்ஏ பிரகாஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தேர்தல் பாதுகாப்பிற்காக வந்த துணை ராணுவப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
|Girl missingChilddeathPoliceProtestPuducherry
Advertisement
Next Article