For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி !

புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை, தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
12:43 PM Feb 09, 2025 IST | Web Editor
புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை, தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை    மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
Advertisement

புதுச்சேரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "டெல்லியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பாஜக பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தை பின்தள்ளி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியா 5வது நாடாக உள்ளது, 2027ல் 3 வது நாடாக முன்னேறும்.

Advertisement

அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கான மிகச்சிறந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 432 கோடி புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.1450 கோடி ஜிப்மருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.186 கோடி புதுச்சேரியின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு. புதுச்சேரி, காரைக்கால், மாஹே ரயில்வே நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தோடு இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது.

இந்தியாவை முன்னேரிய நாடாக இந்த பட்ஜெட் கொண்டு செல்லும். பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ள திட்டம், அனைத்து மாநிலங்களுக்கான திட்டம். தேவையான பட்ஜெட் புதுச்சேரிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை. தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement