ஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்பவர்களே உஷார்... முதியவர்களுக்கு உதவுவது போல் கைவரிசை!
போலி ஏடிஎம் கார்டுகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன் (54). இவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவரும் லெட்சுமணன் என்பவரும் நேன்று மாலை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்க்கு பணம் எடுப்பதற்காக சென்றனர்.
அவர்களுக்க கண் பார்வை தொடர்பான பிரச்னை இருப்பதால் அவர்களால் ஏடிஎம்-ல் இருந்த எழுத்துக்களை சரியாக பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், அவர்கள் அருகில் இருந்த வடமாநில இளைஞர்களிடம் உதவி கேட்டனர். அந்த இளைஞர்கள் ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுக்க முயன்றனர். அந்த இளைஞர்கள் ஏடிஎம்-ல் பணம் இல்லை எனக்கூறியதும் கிருஷ்ணன் மற்றும் லெட்சுமணம் அங்கிருந்து சென்றனர்.
சிறிது நேரத்தில் கிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு ரூ.20,000 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் அதே ஏடிஎம்-கு சென்று பார்த்தார். அங்கு அந்த இளைஞர்கள் இல்லை. தான் ஏமாற்றப்ப்டடதை உணர்ந்த கிருஷ்ணன் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பண மோசடியில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்த ஹரிகுமார் (30) மற்றம் சோரிலால் பசுவான் (32) என்பது தெரியவந்தது.
மேலும், வீட்டில் பதுங்கி இருந்த ஹரிகுமார் மற்றும் சோரிலால் பசுவான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்தது போலியான 50 ஏடிஎம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர்கள் கிருஷ்ணனிடம் போலீயான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அவரின் ஏடிஎம் கார்டை அவர்கள் எடுத்துச்சென்றது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் அந்த உண்மையான ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தனர். அந்த இளைஞர்கள் இது போன்று தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.