For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புதிய தலைமை வழக்கறிஞராகும் பி.எஸ்.ராமன்? - யார் இவர்...?

12:48 PM Jan 10, 2024 IST | Web Editor
புதிய தலைமை வழக்கறிஞராகும் பி எஸ் ராமன்    யார் இவர்
Advertisement

தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ். ராமனை நியமிக்க,  ஆளுநருக்கு அரசு பரிந்துரை செய்ததுள்ளது. 

Advertisement

அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த சண்முகசுந்தரம் ராஜினாமா செய்த நிலையில் பி.எஸ் ராமன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  ஆளும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான பல்வேறு சொத்து குவிப்பு வழக்குகள் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ள நிலையில் இவரின் ராஜிநாமா முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்வதாக சண்முகசுந்தரம் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு பி.எஸ் ராமன் பெயர் பரிந்துரைத்துள்ளது.   ஆளுநரின் ஒப்புதல் கிடைத்த பிறகு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞரான பி.எஸ் ராமன் தமிழக அரசின் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார்.

யார் இவர்?...

  • இவரின் முழு பெயர் பட்டாபி சுந்தர் ராமன்.  பிஎஸ். ராமன் மூத்த வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட்-ஜெனரல் ஆவார்.
  • இவர் முன்னாள் அட்வகேட் ஜெனரலும்,  திமுகவை சேர்ந்தவருமான வி.பி.ராமனின் இளைய மகன் ஆவார்.
  • இவரது மூத்த சகோதரர் பிரபல மேடை மற்றும் தொலைக்காட்சி நடிகர் மோகன் வி. ராம் ஆவார்.
  • ராமன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்து வந்த நிலையில் செப்டம்பர் 2004 இல், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
  • 11 ஜூன் 2006 அன்று, ஆர். முத்துக்குமாரசாமிக்குப் பதிலாக ராமன் கூடுதல் அட்வகேட்-ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
  • 29 ஜூலை 2009 அன்று தமிழ்நாடு வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி ராஜிநாமா செய்தபோது பி.எஸ்.ராமனை  அட்வகேட் ஜெனரலாக அப்போதைய முதல்வர் கருணாநிதி  ஆக்கினார்.
  • அதன்பின் தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக பதவி ஏற்க உள்ளார் பி.எஸ்.ராமன்.
Advertisement