For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதா? - உண்மை என்ன?

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்கிற கூற்றுடன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் செய்திகள் வைரலானது.
10:33 AM Jan 13, 2025 IST | Web Editor
வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதா    உண்மை என்ன
Advertisement

This News Fact Checked by ‘Newsmeter

Advertisement

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறிய பிறகு, சிறுபான்மை இந்துக்கள் மீதான பல தாக்குதல்கள் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் பல பொய்யான தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. சமீபத்தில் பல வீடுகள் தீப்பிடித்து எரியும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது வங்கதேசத்தின் குலியாதரில் இந்துக்களின வீடுகளுக்கு முஸ்லிம்கள் தீ வைத்தனர் என்கிற கூற்றுடன் பரவி வருகிறது.

ஜனவரி 8, 2025 அன்று ஒரு பேஸ்புக் பயனர் இந்த வைரல் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், வங்கதேசத்தில் இருந்து மற்றொரு இதயத்தை நொறுக்கும் செய்தி,  குலியாதர் கிராமத்தில், முஸ்லிம்கள் இந்துக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினரின் வீடுகள் தினமும் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. வெட்கக்கேடு" என்று எழுதினார்.

 உண்மை சரிபார்ப்பு :

உண்மையை அறிய வைரலான வீடியோவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். இந்த வைரலான வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்டுடன் வங்கதேசத்தில் உள்ள பல செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைக் கண்டோம். வங்கதேச உள்ளூர் செய்தி ஊடகமான News24bd ஜனவரி 9, 2025 அன்று "பாகரஹாட்டில் இரு தரப்பினருக்கு இடையேயான மோதல்கள் 8 வீடுகள் பற்றி எரிந்தன" என்ற தலைப்பில் இந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

தகவலின்படி புதன்கிழமை (ஜனவரி 8) மாலை, பாகாஹாட்டில் உள்ள பிஷ்ணுபூர் ஒன்றியத்தின் குலியாடிடே கிராமத்தில் பிஎன்பியின் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கட்சி சார்பற்றதாக ஆரம்பித்த மோதலில் இருந்து எதிரணியினரின் தாக்குதலால் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமானது, பெண்கள், குழந்தைகள் உட்பட 25 பேர் காயமடைந்தனர். போலீஸ் மற்றும் உள்ளூர் ஆதாரங்களின்படி, பிஷ்னுபூர் யூனியன பிஎன்பியின்  அழைப்பாளர் ரூஹுல் அமீன்/ரூஹுல் உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் பிஎன்பியின் முன்னாள் யூனியன் தலைவர் முஸ்தபிசுர் ரஹ்மானின் ஆதரவாளர்களுடன் மோதினர். இதன் காரணமாக முஸ்தபிசுர் ரஹ்மானின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ரூஹுல் உறுப்பினர் மற்றும் அவரது 7 சகோதரர்களின் வீட்டிற்கு மாலையில் தீ வைத்தனர்.

சமீபத்தில், யூனியன் பிஎன்பி கமிட்டியின் அமைப்பு குறித்த சர்ச்சை உச்சகட்டத்தை எட்டியது.  இந்த மோதலில் 5 பேர் காயமடைந்தனர். புதன்கிழமை பிற்பகல் தொடங்கிய பதிலடித் தாக்குதல் மாலைக்குள் பெரும் பேரழிவாக மாறியது.  ரூஹுல் உறுப்பினர் மற்றும் அவரது சகோதரர்களின் வீட்டை நூற்றுக்கணக்கான மக்கள் தாக்கி, சூறையாடி, தீ வைத்து எரித்தனர். ஆறு மோட்டார் சைக்கிள்கள் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.

ஜனவரி 9, 2025 அன்று பங்களா தாகத்ரிபுன் செய்தி அறிக்கையின்படி  "பிஎன்பியின் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பகர்ஹாட்டின் பிஷ்னுபூர் ஒன்றியத்தின் குலியாடைர் கிராமத்தில் எட்டு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன." இதன்போது இருதரப்பிலும் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தீ விபத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள், உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பிஷ்ணுபூர் யூனியன் பிஎன்பியின் முன்னாள் தலைவர் முஸ்தாபிசுர் ரஹ்மானுக்கும், முன்னாள் கூட்டு அழைப்பாளர் ரூஹுல் அமீனுக்கும் இடையே இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை மற்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதேபோல டைனிக் இன்கிலாப் மற்றும் பங்களா ட்ரிப்யூன் ஆகியவை பிஷ்னுபூர் யூனியனின் குலியாதர் கிராமத்தில் பிஎன்பியின் இரு பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் என்று வைரல் வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டுடன் செய்திகளை வெளியிட்டுள்ளது. அதனை நீங்கள் படிக்கலாம். எனவே இந்த அனைத்து தகவல்களின் அடிப்படையில் பங்களாதேஷின் பகர்ஹாட்டில் இரண்டு முஸ்லிம் குழுக்களுக்கு இடையேயான மோதல் பிஎன்பியின் பிரிவுகளுக்கு இடையேயான சர்ச்சையில் ஏற்பட்ட வன்முறை தவறான வகுப்புவாத கூற்றுடன் பகிரப்படுகிறது.

முடிவு : 

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன என்கிற கூற்றுடன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் செய்திகள் வைரலானது. இதுகுறித்து நியூஸ் மீட்டர் நடத்திய ஆய்வில்  வங்கதேசத்தை சார்ந்த இரண்டு முஸ்லிம்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ஆதரவாளர்கள் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் என்பது தெரியவந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட இருவரும் முஸ்லிம்கள் என்றும் இந்துக்கள் அல்ல என்றும் செய்தி அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘Newsmeter and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement