For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

JNU வளாகத்தில் போராட்டங்களுக்கு தடை | மீறினால் ரூ.20,000 அபராதம்!

02:10 PM Dec 12, 2023 IST | Web Editor
jnu வளாகத்தில் போராட்டங்களுக்கு தடை   மீறினால் ரூ 20 000 அபராதம்
Advertisement

நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்தின் புதிய விதிகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை மற்றும் மோதல் சம்பவங்களை தடுக்க ஜேஎன்யு நிர்வாகம் கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளது.  இப்போது JNU மாணவர்கள் தடை செய்யப்பட்ட இடங்களில் போராட்டம்,  சண்டை,  கலவரம் மோதல் மற்றும் வன்முறை போன்றவற்றுக்கு கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழகத்தில்,  நிர்வாக கட்டிடம் அல்லது எந்த பீடத்தின் 100 மீட்டருக்குள் ஆர்ப்பாட்டம்,  உண்ணாவிரதப் போராட்டம்,  சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்றவற்றை நடத்தும் மாணவர்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி,  பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறினால் கடும் அபராதம்:

1.) கல்விக் கட்டடங்களுக்கு 100 மீட்டர் தூரத்தில் சுவரொட்டிகளை ஒட்டினால் ரூ.20,000 வரை அபராதம்.

2) கல்விக் கட்டிடங்களுக்கு 100 மீட்டருக்குள் போராட்டம் நடத்தினால் ரூ.20,000 வரை அபராதம்.

3) நிர்வாக கவுன்சில் நினைத்தால் ஒரு மாணவரை எப்போது வேண்டுமானாலும் நீக்கம் செய்யலாம்

4) 'தேச விரோத'  புகாருக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு ரூ.10,000 அபராதம்.

5) எந்த மதம்,  சாதி அல்லது சமூகத்தின் மீது வன்முறை தூண்டுவதும் தண்டனைக்குரியதாகக் கருதப்படுகிறது.

தண்டனை வழங்க அதிகாரம் உள்ளது:

நவம்பர் 24ல் நடந்த நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.  எந்தவொரு செயலையும் தண்டனைக்குரியதாகக் கருதும் அதிகாரம் துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுரி பண்டிட் அல்லது தகுதியான அதிகாரிக்கு இந்த அதிகாரம் இருக்கும் என்று புதிய விதிகள் கூறுகின்றன.

இந்த விதிகளுக்கு மாணவர் சங்கம் எதிர்ப்பு: 
இந்த விதிகள் பல்வேறு செயல்களுக்கான தண்டனைகளை கோடிட்டுக் காட்டுகின்றன.
முன் அனுமதியின்றி ஜேஎன்யு வளாகத்தில் போராட்டங்கள்,  வரவேற்பு விருந்துகள், பிரியாவிடைகள் அல்லது டிஸ்க் ஜாக்கிகள் (டி.ஜே) போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அபராதம் விதியும்  இதில் உள்ளது.
இந்த விதி இங்கு பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தும்.  அதே நேரத்தில், ஜேஎன்யு மாணவர் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  மாணவர்களின் குரலை நசுக்க ஜேஎன்யு நிர்வாகம் முயற்சிப்பதாக மாணவர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.
Advertisement