Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சேலம் வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்புகள் அறிவிப்பு

07:43 PM Jan 10, 2024 IST | Web Editor
Advertisement

சேலம் வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

Advertisement

போலி ஆவணங்கள் மூலம் தனியார் நிறுவனங்களைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் மோசடி , போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 9 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பெரியார்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் டிச.26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜெகநாதனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தியபோது அவர் தரப்பு வழக்குரைஞர்கள் உடல் நிலை, வயது ஆகியவைகளை காரணம் காட்டி கடுமையாக வாதம் செய்தனர்.  தொடர்ந்து அவருக்கு சூரமங்கலம் காவல் நிலையத்தில் 7 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:   “விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

காவல் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் குடியிருப்பு,  அலுவலகம்,  விருந்தினர் விடுதி,  பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.   தொடர்ந்து, 17 மணி நேரத்தை கடந்து சோதனை நடைபெற்ற சூழலில் பதிவாளர் அலுவலகம்,  துணைவேந்தர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய ஆவணங்கள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக போலீசார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து நீதிமன்றம் சென்ற அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன் தெரிவித்ததாவது..  “  இந்தியா கூட்டணி கட்சிகளின் மாணவர்களின் அணிகள் ஒன்றிணைந்து United Students of India என்ற அமைப்பை உருவாக்கி உள்ளோம். இந்த கூட்டமைப்பு சார்பாக ஜனவரி 12 ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்ள இருக்கிறோம். ” என தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு , இந்தியாவை காப்போம்
என்ற முழக்கங்களை முன்னிட்டு இந்த பேரணி நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும்  சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் ஒரு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, உடனடியாகவும் நீதிமன்றம் மூலம் விடுகிக்கப்பட்டார். ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எப்படி ஒரே நாளில் வெளியே வந்தார் என உயர்நீதிமன்ற கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக இரண்டு நாட்களில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நாளை அந்த பல்கலைகழகத்தில் துணைவேந்தர் ஜெகநாதனை வைத்துக்கொண்டே ஆளுநர் கூட்டம் நடத்த இருக்கிறார். ஊழல் செய்த துணை வேந்தரை பாதுகாக்கவே ஆளுநர் நாளை அங்கு செல்கிறார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
INDIA AllianceProtestSalem Vice ChancellorTn governorTN Governor RN Ravi
Advertisement
Next Article