For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ProKabaddiLeague | ஹரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்!

05:05 PM Oct 28, 2024 IST | Web Editor
 prokabaddileague   ஹரியானா ஸ்டீலர்ஸ்   தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்
Advertisement

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

Advertisement

11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் தபாங் டெல்லி 5வது இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் 9வது இடத்திலும், ஹரியானா ஸ்டீலர்ஸ் 10வது இடத்திலும், பாட்னா பைரேட்ஸ் 11வது இடத்திலும் உள்ளன.

Advertisement