For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராம நவமி வாழ்த்து!

வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
09:45 AM Apr 06, 2025 IST | Web Editor
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராம நவமி வாழ்த்து
Advertisement

ராமரின் அவதார தினத்தை ராம நவமி, ராம ஜெயந்தி என கொண்டாடி வருகிறோம். இந்திய முழுவதும் ராம நவமி திருநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அயோத்தியில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Advertisement

ராம நவமியை முன்னிட்டு, ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் சரயு நதியில் புனித நீராடினர். மேலும் பக்தர்களுக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ராம நவமியை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தியாகம், அர்ப்பணிப்பு, நல்லிணக்கம், வீரம் உள்ளிட்ட உயர்ந்த கொள்கைகளை ராமர் வழங்கினார். வளர்ந்த இந்தியாவை கட்டமைக்க அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். புனித பண்டிகையான ராம நவமியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement