'சாகித்திய அகாடமி' விருதுக்கு தேர்வான பேராசிரியர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !
2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு சாகித்திய அகாடமி பரிசுக்கு 21 மொழிகளில் இருந்து புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழ் மொழிபெயர்ப்புக்கான தேர்வுக்குழுவில் இந்திரன், டாக்டர் ஜி. சுந்தர், எஸ். பக்தவத்சலா பாரதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களின் பரிந்துரைப்படி 'என்டே ஆண்கள்' என்ற நளினி ஜமீலாவின் மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை 'எனது ஆண்கள்' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்த ப. விமலாவின் படைப்பு சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பு நூலாக தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் தாமிரப்பட்டயம் வழங்கப்படும் என்று சாகித்திய அகாடமி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேராசிரியை விமலாவுக்கு வாழ்த்தி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான #SahityaAkademi மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் திருமிகு ப. விமலா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன். pic.twitter.com/4fIlIkzzbW
— M.K.Stalin (@mkstalin) March 9, 2025
" 'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப.விமலாவிற்கு எனது பாராட்டுகள். கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழி பெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்". இவ்வாறு முதலமைசர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.