For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புரோ கபடி லீக் - மூன்றாம் கட்ட சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடக்கம்

12 வது புரோ கபடி லீக் சீசனின் 3வது சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது.
12:05 PM Sep 29, 2025 IST | Web Editor
12 வது புரோ கபடி லீக் சீசனின் 3வது சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகிறது.
புரோ கபடி லீக்   மூன்றாம் கட்ட சுற்று போட்டிகள் சென்னையில் இன்று தொடக்கம்
Advertisement

புரோ கபடி லீக் போட்டியின் 12-வது சீசன் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. முதல் கட்ட ஆட்டங்கள் விசாகப்பட்டினத்திலும், 2-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்தன. இந்த நிலையில் 3 வது  சுற்று போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு புரோ கபடி லீக் போட்டிகள் சென்​னையில் நடக்கிறது.

Advertisement

இன்று இரவு நடை​பெறும் முதல் போட்​டி​யில் யுபி யோதாஸ் - குஜ​ராத் ஜெயன்ட்ஸ் அணி​கள் மோதவுள்​ளன. இதைத் தொடர்ந்து 9 மணிக்கு நடை​பெறும் 2-வது போட்டியில் ஹரி​யானா ஸ்டீலர்ஸ் - தபாங் டெல்லி அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. தமிழ் தலை​வாஸ் அக்​டோபர் 1-ம் தேதி யு மும்​பாவுடன் மோதுகிறது. அடுத்த மாதம் 10-ந் தேதி வரை இங்கு மொத்தம் 24 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

புள்ளிபட்டியலில் முன்னாள் சாம்பியன்களான தபாங் டெல்லி 7 வெற்றி, ஒரு தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும், புனேரி பால்டன் 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 4 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. சொந்த மைதானத்​தில் நடை​பெறும் போட்​டியை தமிழ் தலை​வாஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement