மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார் மெக்சிகோவின் பாத்திமா போஷ்..!
சர்வதேச அழகுப் போட்டிகளில் ஒன்று மிஸ் யூனிவர்ஸ் (பிரபஞ்ச அழகி). ஆண்டு தோறும் நடத்தப்படும் இப்போட்டியில் இது உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்வர். 1952-ஆம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான 74-வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி, தாய்லந்தில் உள்ள இம்பாட் சேலஞ்சர் ஹாலில் நடந்தது வந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இந்தியா சார்பில் மணிக விஸ்வகர்மா போட்டியிட்டார்.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ் வென்றுள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க்கைச் சேர்ந்த விக்டோரியா கஜேர் தீல்விக் மகுடத்தை சூட்டினார். தாய்லாந்தின் வீணா பிரவீனர் சிங் முதல் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற, பாத்திமா போஷ்க்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் தொடக்கத்தில் போட்டியின் - மேற்பார்வையாளர் ஒருவர், பாத்திமா போஷை, விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததற்காக முட்டாள் என்று திட்டியதாக கூறப்பட்டது. இதனால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாத்திமா போஷ், செய்தியாளர்களை சந்தித்து அந்நபர் செய்தது மரியாதையான செயல் அல்ல என்று தெரிவித்தார். பாத்திமாவின் இந்த தைரியமாக பேட்டியை மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பா பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோ நாட்டின் டபாஸ்கோவைச் சேர்ந்தவர் ஃபாத்திமா போஷ். 25 வயதான ஃபாத்திமா போஷ் ஒரு பேஷன் டிசைனர் ஆவார். சிறு வயதில் டிஸ்லெக்ஸியா, ADHD மற்றும் ஹைபராக்டிவிட்டி போன்றவையால் பாதிக்கப்படிருந்த பாத்திமா போஷ் தனது அனுபவங்களை பற்றி வெளிப்படையாக பேசியதன் மூலம் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தார். பாத்திமா போஷ், மெக்சிகோவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெல்லும் நான்காவது பெண்மணி ஆவார்.