கரூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!
குளித்தலை அருகே தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்ற நேற்று இரவு புறப்பட்டது. இந்த பேருந்து கரூர் மாவட்டம் லாலாபேட்டை ரயில்வே மேம்பாலத்தில் நேற்று நள்ளிரவு சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லாலாபேட்டை போலீசார் கிரேன் உதவியுடன் பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அந்த பேருந்தில் ஓட்டுநர், கிளீனர், இரண்டு பெண் பயணிகள் உட்பட 6 பேர் பயணம் செய்த நிலையில், அதிஷ்டவசமாக 6 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் ஜீவானந்தததிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.