For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு! அதிபர் ஷஹாபுதீன் உத்தரவு!

06:39 PM Aug 06, 2024 IST | Web Editor
வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு  அதிபர் ஷஹாபுதீன் உத்தரவு
Advertisement

பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்த நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு அதிபர் முகம்மது ஷஹாபுதீன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

வங்கதேசத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலமாக நேற்று(ஆக. 5) மாலை டெல்லி வந்தடைந்தார். தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அவர் லண்டன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் வங்கதேச ராணுவம் அங்கு இடைக்கால அரசு அமைக்க உள்ளதாகவும் ராணுவத் தளபதி நேற்று அறிவித்தார். தொடர்ந்து, ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்த நிலையில் வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்த நாட்டு அதிபர் முகம்மது ஷஹாபுதீன் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :‘வேட்டையன்’ படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்த துஷாரா விஜயன்! – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

இதுகுறித்து அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

"முப்படைகளின் தளபதிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவர் இயக்கத்தின் தலைவர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பிறகு நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கடந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை அந்த நாட்டில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement