அரசியல் சாசன தினம் | இன்று உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை!
இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று உச்சநீதிமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ம் தேதி இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் இன்று இந்திய அரசியல் சாசன தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட 75-ஆவது ஆண்டு ஆகும். எனவே இந்த நாளை கூடுதல் சிறப்புடன் மத்திய அரசு கொண்டாடுகிறது. இதற்காக, பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதையும் படியுங்கள் : சொர்கவாசல் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!
பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் தான் அரசியல் நிர்ணய சபை, நாட்டின் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட நிகழ்வு நடந்தது. அரசியல் சாசன தினத்தையொட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் நிர்வாக கட்டடத்தில் உள்ள அரங்கில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.