பிரதமர் நரேந்திர மோடியின் ராஜிநாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமா மற்றும் அமைச்சரவையை கலைப்பது தொடர்பான கடிதங்களை ஏற்றுக்கொண்டார்.
இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 2 மணி நேர அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதாவது புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் தற்போதைய மக்களவையை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் எனவும் அதற்கான தீர்மானத்தை குடியரசுத் தலைவரிடம் கொடுக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக புதிய அரசு அமைப்பதற்கான திட்டங்களை பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்னும் இரண்டு நாட்களுக்குள் எஞ்சியுள்ள பணிகளை முடித்து சனிக்கிழமை அன்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.
ராஜினாமா https://t.co/Co8gRgeUek | #DroupadiMurmu | #Modi | #loksabahaelection2024 | #ElectionWithNews7Tamil | #ResultsWithNews7Tamil | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/bU8j5MSxE3
— News7 Tamil (@news7tamil) June 5, 2024
இதையடுத்து, தனது ராஜினாமா மற்றும் அமைச்சரவையை கலைப்பது தொடர்பான கடிதங்களை, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பிரதமர் மோடி வழங்கினார். இந்த ராஜினாமாவை ஏற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அடுத்த அரசு உருவாகும் வரை காபந்து பிரதமராக மோடி தொடர வேண்டுகோள் விடுத்தார். மேலும் ஜூன் கடைசி வாரத்தில் புதிய எம்பிக்களின் பதவியேற்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, நாளை குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் நரேந்திர மோடி. இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என பாஜக தேசிய தலைவர்கள் நியூஸ் 7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.