For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணத்திட்டம் - முழு விவரம்!

11:17 AM Jan 19, 2024 IST | Web Editor
பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணத்திட்டம்   முழு விவரம்
Advertisement

3 நாட்கள் தேர்தல் மற்றும் ஆன்மிக பயணம் காரணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் பயணத்திட்ட விவரத்தை தற்போது பார்க்கலாம்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை துவக்கி வைக்க இன்று தமிழ்நாடு வருகிறார்.  நாளை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சிவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார்.  பின்னர் ராமேஸ்வரம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.இ ன்று மாலை 5 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பெங்களூருவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என். ரவி,  முதலமைச்சர் ஸ்டாலின்,  உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.

பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணத்திட்டம் : 

ஜனவரி 19:

  • மாலை 5 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை
  • சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
  • மாலை 5.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்ஸ் அடையாறு கடற்படை தளத்திற்கு செல்கிறார்.
  • அடையாறு கடற்படை தளத்தில் இருந்து கார் மூலம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார்.
  • அங்கு கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவை தொடங்கி வைக்கிறார்.
  • அதன் பிறகு இரவு 7.45 மணிக்கு கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.
  • ராஜ் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் பாஜக நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
  • அதன்பிறகு இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

ஜனவரி 20 திட்டம்:

  • காலை 9 மணி கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை விமான நிலையம் செல்கிறார்.
  • காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார்.
  • திருச்சி விமான நிலையதில் இருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் செல்கிறார்.
  • காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
  • அங்கிருந்து கார் மூலம் மீண்டும் திருச்சி விமான நிலையம் செல்கிறார்.
  • திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானம் மதுரை விமான நிலையம் செல்கிறார்.
  • மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார்.
  • பிற்பகல் 2.05 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் பிரதமர் கடலில் நீராடுகிறார்.
  • பிற்பகல் 2.10 மணிக்கு ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
  • அதன் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்திற்கு இரவு தங்குகிறார்.

ஜனவரி 21 திட்டம்:

  • காலை 10.05 மணிக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுகிறார்.
  • பின்னர் காரில் சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார்.
  • காலை 10.30 மணிக்கு கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
  • அதன்பிறகு ராமர் பாலம் இருந்ததாகக் கூறப்படும் இடத்தை பார்வையிடுகிறார்.
  • ராமேஸ்வரத்தில் இருந்து புனித நீரை எடுத்துக் கொண்டு மதுரை விமான நிலையம் செல்கிறார்.
  • மதுரை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
  • அடுத்த நாள் (ஜனவரி 22) அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று ராமர் சிலை பிரதிஷ்டையில் கலந்து கொள்கிறார்.
Tags :
Advertisement