குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!
கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் இன்று செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜன.16) காலை ஆந்திரா சென்றார். மேலும் அங்குள்ள அனந்தபூர் மாவட்டம், லேபாக்ஷியில் உள்ள வீரபத்ரா கோயிலில் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். இதனைத் தொடர்ந்து கொச்சி விமான நிலையத்துக்கு நேற்று (ஜன.16) இரவு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, ஆளுநர் ஆரிஃப் முகமத் கான் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் பிரதமர் மோடி கொச்சியில் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக சென்றார். அவருக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.
இதையும் படியுங்கள்: இஸ்ரேல் – ஹமாஸ் போர்: 24,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!
இந்த நிலையில், கேரளத்தில் உள்ள குருவாயூரப்பன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.17) காலை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.